
2018-19ஆம் கல்வியாண்டில் முதுகலை (எம்.ஏ) தமிழ் இலக்கியம் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இத்துறை ஆய்வுத்துறையாக வளர உள்ளது. அதன் முதல்படியாக துறை சார்பில் 19.07.2018 அன்று ‘கண்ணன் தமிழ்ப் பேராயம்’ என்ற அமைப்புத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் ‘வாகை’ காலாண்டு இதழும் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்புடன் ஆண்டுதோறும் ஆய்வு நூல்களும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளன. இதன் தொடர் நிகழ்வாக கருத்தரங்கங்களும் கருத்துப் பட்டறைகளும்‘கண்ணன் தமிழ்ப் பேராயம்’ சார்பில் நடைபெற உள்ளன. மேலும் தமிழ்த்துறை தம் மாணவர்களுடன் இணைந்து மூலிகைச் சோலை ஒன்றையும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழ்த்துறை சார்பில் பல்வேறு விழாக்களும் பல்லாற்றல் திறன் வளர்ப்புப் போட்டிகளும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
நிகழ்வு – 1
19.07.2018 அன்று தமிழ்த்துறை சார்பில் ‘கண்ணன் தமிழ்ப் பேராயம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. பாவலர் அறிவுமதி இந்நிகழ்வுக்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.