தருமமூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவாக 1969-ல் தொடங்கப்பட்டது இக்கல்லூரி.  அதே ஆண்டிலேயே தமிழ்த்துறை தொடங்கப்பட்டு, பட்ட வகுப்புகளில் பகுதி ஒன்றின்கீழ் தமிழ் முதல் மொழிப்பாடமாக நடத்தப்பட்டு வருகிறது.  தமிழ்த்துறைப் பேராசிரியர் க.கோவிந்தராசன் 1972-ல் கல்லூரி முதல்வரானது தமிழ்த்துறைக்குப் பெருமை சேர்த்த ஒன்றாகும்.

தமிழ்த்துறை தமிழ் மன்றம் 1970 ஆம் ஆண்டு கவியோகி சுத்தானந்த பாரதி அவர்களால் தொடங்கப்பட்டது.  தொடர்ந்து ஆண்டுதோறும் நடைபெற்ற தமிழ்மன்ற நிகழ்ச்சிகளில் பல்துறை ஆளுமைகள் கலந்து கொண்டு சிறப்புச் செய்துள்ளனர்.

            14.08.2018 முதல் தமிழ்த்துறை தமிழ்மன்றம் “காந்தள் தமிழ்மன்றம்” என்னும் புதுப்பெயருடன் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.  கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் காந்தள் தமிழ் மன்றத்தைத் தொடங்கி வைத்தார்.

தமிழ்த்துறை ஆண்டுதோறும் தமிழ்மன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதோடு 2003-ஆம் ஆண்டு முதல் மார்கழி மாதங்களில் தொடர்ந்து திருப்பாவை, திருவெம்பாவை பாடலும் உரையும் என கல்லூரி துவங்குவதற்குமுன் நாளுக்கு ஒரு பாடலாக மாதம் முழுவதும் நடத்தி வருகிறது.  நிகழ்ச்சியின் நிறைவாக பாவை விழாவும் கொண்டாடி பாவை பாடிய மாணவர்களுக்கு பரிசு அளித்து வருகிறது.

எமது கல்லூரி மாணவர்கள் இதர கல்லூரிகளில் நடைபெறும் போட்டிகளில் தவறாது கலந்துகொண்டு பரிசுகளை பெற்று வருகின்றனர்.

செல்வி க. பேபி M.A., M.Phil.,NET.,

உதவிப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர;

பணி அனுபவம் : 11ஆண்டுகள்

மின்னஞ்சல்: babykannaiah@yahoo.com

திருமதி ச.மு.சங்கவை M.A., M.Phil.,NET.,


உதவிப் பேராசிரியர்

பணி அனுபவம்  : 13ஆண்டுகள்

மின்னஞ்சல்: sangavai.sm356@gmail.com

திருமதி ஜே.க.சுந்தரி M.A., M.Phil.,SLET.,


உதவிப் பேராசிரியர்

பணி அனுபவம் : 11ஆண்டுகள்

மின்னஞ்சல்: jksundari574@gmail.com

முனைவர் க.கிருஷ்ணமூர்த்தி M.A., M.Phil., Ph.D.,NET.,


உதவிப் பேராசிரியர்

பணி அனுபவம் : 5ஆண்டுகள்

மின்னஞ்சல்:krishnamurthyk82@gmail.com

 

காந்தள் – தமிழ் மன்றம் தொடக்க விழா                             

தமிழ்த்துறை சார்பாக 14-08-2018 அன்று ‘காந்தள்’ தமிழ் மன்றம் தொடங்கப்பட்டது. நமது கல்லூரி முதல்வர் முனைவர் வ.இலட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் கலந்துகொண்டு ‘இலக்கியத்தில் காந்தள் மலர்’ குறித்த பல்வேறு செய்திகளை  எடுத்துக்கூறியதோடு ‘சென்ரியு’ கவிதைகள் குறித்த சிறப்பானதோர் அறிமுகத்தையும் மாணவர்களுக்கு வழங்கினார்.

சிறப்புச் சொற்பொழிவு

காந்தள் தமிழ் மன்றம் சார்பாக 04-10-2018 அன்று சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. நமது கல்லூரி முதல்வர் முனைவர் வ.இலட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழறிஞர் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தமிழ் மொழியின் தனித்தியங்கும் சிறப்பு குறித்தும் பிறமொழிக் கலப்பின்றியும் பிழைகளின்றியும் தமிழைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

பாரதி விழா

காந்தள் தமிழ் மன்றம் சார்பாக மகாகவி பாரதியாரின் 136 வது பிறந்தநாள் விழா 11-12-2018 அன்று நடைபெற்றது. நமது கல்லூரி முதல்வர் முனைவர் வ.இலட்சுமி அவர்கள் விழாவிற்குத் தலைமை வகித்ததுடன் பாரதி குறித்த பல சுவையான செய்திகளை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் ‘பாரதியின் பன்முகப்பார்வை’ என்னும் தலைப்பில் சிறப்புரையும் வழங்கினார்.

 

2017- 18

 1. சிறப்புச் சொற்பொழிவு

  நாள் : 28-07-2017

தமிழ்த்துறை சார்பில் 28-07-201 அன்று  நடைபெற்ற சிறப்புச் சொற்பொழிவில் உலகத் திருக்குறள் பேரவைத் தலைவர் திரு. திருவை பாபு அவர்கள் கலந்துகொண்டு ‘தமிழும் சமயமும்’ என்னும் தலைப்பில் உரையாற்றினார்.

 1. ஊடகத் தமிழ்

  நாள் : 07-08-2017

தமிழ்த்துறை சார்பில் 07-08-2017 அன்று  நடைபெற்ற ஊடகத் தமிழ் குறித்த நிகழ்வில் எழுத்தாளர் திரு கார்த்திக் ராஜா அவரகள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ‘செய்திகளும் ஊடகங்களும்’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

 1. பாரதி விழா

  நாள் : 11-09-2017

தமிழ்த்துறை சார்பில் 11-09-2017 அன்று  நடைபெற்ற பாரதி விழாவில் முனைவர் கமலா முருகன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

             

 1. கருத்துப்பட்டறை

  நாள் : 11-12-2017

தமிழ்த்துறை சார்பில் 11-12-2017 அன்று ‘பாரதிதாசன் பாடல்களில் இயற்கை’ என்னும் பொருண்மையில் கருத்துப்பட்டறை நடைபெற்றது. இந்நிகழ்வில் முனைவர் கமலா முருகன் அவர்களும் முனைவர் விமலா அவர்களும் கலந்துகொண்டு ஆய்வு இதழை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்கள்.

 1. பட்டிமன்றம்

  நாள் : 21-02-2018

பன்னாட்டுத் தாய்மொழி நாளை முன்னிட்டு தமிழ்த்துறை சார்பில் 22-02-2018 அன்று சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. கவிஞர் வெற்றிவேலன் அவர்கள் நடுவராக இருந்து பட்டிமன்றத்தை நடத்தி வைத்தார்.

 

2016- 17

 1. இலக்கிய மன்றத் தொடக்க விழா

  நாள் : 26-08-2016

தமிழ்த்துறை சார்பாக 26-08-2016 அன்று இலக்கிய மன்றத் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் அகில இந்திய எழுத்தாளர் சங்கத்தின் செயலர் திரு. இதயகீதம் ராமானுஜம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ‘நாடு, மொழி, இனம்’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

 1. பாரதி விழா

  நாள் : 21-09-2016

தமிழ்த்துறை சார்பாக 26-08-2016 அன்று பாரதி விழா நடைபெற்றது. விழாவில் ஆதிபராசக்தி மகளிர் கல்லூரி மேனாள் முதல்வர் முனைவர் பிரேமா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ‘மகாகவியின் சிந்தனைகள்’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

 1. கருத்துப்பட்டறை

  நாள் : 30-12-2016

தமிழ்த்துறை சார்பாக 30-12-2016 அன்று ‘பன்முக நோக்கில் சமூக ஆய்வு’ என்னும் பொருண்மையில் கருத்துப்பட்டறை நடைபெற்றது. இந்நிகழ்வில் முனைவர் கமலா முருகன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஆய்வு இதழை (ISSN) வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

 1. இலக்கிய மன்ற நிறைவு விழா

  நாள் : 27-02-2017

தமிழ்த்துறை சார்பாக 27-02-201 அன்று  நடைபெற்ற இலக்கிய மன்ற நிறைவு விழாவில்; சிறப்பு விருந்தினராக செம்மொழிக் கவிஞர் திரு. பிரபாகர ராவ் அவர்கள் கலந்துகொண்டு  சிறப்புரையாற்றினார்.

c

           

2015- 16

 1. பன்னாட்டுக் கருத்தரங்கம்

  நாள் : 21-09-2015

தமிழ்த்துறை சார்பில் ‘தற்கால இலக்கியங்களில் மகளிர் சிந்தனை’ என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் 21-09-2015 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறைப் பேராசிரியர் முனைவர் நாகபுஷணி அரங்கராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஆய்வு நூலை வெளியிட்டு சிறப்புரை வழங்கினார்.

 1. திருப்பாவை நிறைவு விழா

  நாள் : 22-01-2016

தமிழ்த்துறை சார்பாக 22-01-2016 அன்று நடைபெற்ற திருப்பாவை நிறைவு விழாவில் இராணி மேரி மகளிர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் கமலா முருகன் சிறப்புரையாற்றினார்.

செல்வி க. பேபி M.A., M.Phil.,

 ஆய்விதழ்களில் பிரசுரமான கட்டுரைகள்                        : 02

கருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள்                : 04

பங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம்          : 03


திருமதி ச.மு.சங்கவை M.A., M.Phil.,

கருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள்          : 01

பங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம்    : 03


திருமதி ஜே.க.சுந்தரி M.A., M.Phil.,

கருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள்         : 05

பங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம்    : 03


முனைவர் க.கிருஷ்ணமூர்த்தி M.A., M.Phil., Ph.D.

கருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள்       : 01

பங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம்    : 03